டிராக்டர் மோதி பெண் பலி

பனவடலிசத்திரத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் டிராக்டர் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-13 18:45 GMT

பனவடலிசத்திரம்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சரவணபுரிைய சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34). இவருடைய மனைவி ஜெயா (29). இவர்கள் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் சரவணபுரிக்கு வந்து கொண்டிருந்தனர். பனவடலிசத்திரம் பஜாரில் வந்தபோது பின்னால் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயாவை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை ஓட்டி வந்த பனவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



Tags:    

மேலும் செய்திகள்