நெல்லை மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புது விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராணி (வயது 47). இவர் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.