சரக்கு வாகனம் மோதி பெண் பலி

குன்னூர் அருகே சரக்கு வாகனம் மோதி பெண் பலியானார்.

Update: 2023-09-04 21:45 GMT

ஊட்டி

குன்னூர் கரும்பாலம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி பரமேஸ்வரி (வயது 55), கூலித்தொழிலாளி. இந்தநிலையில் நேற்று பரமேஸ்வரி கோத்தகிரிக்கு செல்ல கரும்பாலம் பஸ் நிறுத்தத்திற்கு சென்று பஸ் ஏறுவதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் கடையில் பொருட்களை இறக்கிவிட்டு வாகனத்தை திருப்புவதற்காக பின்னோக்கி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரி மீது வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமணி, சப்-இன்ஸ்பெக்டர் நவீன் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, பரமேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக சேலாஸ் கிழிஞ்சாடா பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்