பஸ் மோதி பெண் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி பெண் பலியானார்.

Update: 2023-05-07 19:03 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி பெண் பலியானார்.

சாலையை கடக்க முயன்றார்

கேரள மாநிலம் பாலக்காடு கிளியலூரை சேர்ந்தவர் ராமர் என்ற ராமசாமி (வயது 67). இவருடைய மனைவி பிரேமா (55). இவர்கள் இருவரும் தென்காசி அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு தென்காசியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ்சில் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒரு ஓட்டலில் பஸ் நின்றது.

அப்போது பிரேமா பஸ்சில் இருந்து இறங்கி சாலையின் மறுபக்கம் செல்வதற்காக சென்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

பெண் சாவு

அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ் பிரேமா மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சங்கரன் கோவிலை சேர்ந்த சங்கர நாராயணன் (47) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்