வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக தின்ற பெண் சாவு
வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக தின்ற பெண் உயிரிழந்தார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கீழாயூர் காலனியை சேர்ந்தவர் பாண்டி கண்ணன். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 44). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடல் இறக்கம் ஆபரேஷன் செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வயிற்று பகுதியில் வலி இருந்ததாகவும், அதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தனலட்சுமிக்கு வலி அதிகமாக இருந்ததால் அவர் வலி நிவாரணி மாத்திரைகளை கூடுதலாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.