கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண் தர்ணா
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாங்குநேரி அருகே உள்ள நம்பித்தலைவன் பட்டயத்தை சேர்ந்த இசக்கிதுரை மனைவி அய்யம்மாள். இவர் தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எனது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். என் கணவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. அவரை கைது செய்தால் நாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவோம். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.