பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண், குழந்தையுடன் சாவு

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இவர்களின் இறப்புக்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Update: 2022-05-28 19:42 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இவர்களின் இறப்புக்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகர் நரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் ராஜா(வயது 29) என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்சமயம் ஊருக்கு வந்துள்ளார்.இவருடைய மனைவி வைெஜயந்தி(28), நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைெஜயந்தி காண்பித்து சிகிச்சை பெற்று வந்தார்.

இறந்து பிறந்த குழந்தை

இந்த நிலையில் வைெஜயந்திக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் ராஜா மற்றும் உறவினர்கள் வைெஜயந்தியை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிகிச்சைக்கு சேர்த்த சிறிது நேரத்தில் வைெஜயந்திக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. அதனைத்தொடர்ந்து வைெஜயந்தியின் உடல்நிலை மோசமானது. இதனைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

தாயும் சாவு

ஆனால் அதில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவரை தஞ்சாவூர் ராசா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வைெஜயந்தி தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 2 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி வைெஜயந்தி பரிதாபமாக இறந்தார்.

போலீசில் கணவர் புகார்

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் ராஜா ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாகவே எனது மனைவியும், குழந்தையும் இறந்தனர். எனவே டாக்டர்கள், நர்சுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக பட்டுக்கோட்டை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்