தீக்குளித்து பெண் தற்கொலை

திருவெண்ணெய்நல்லூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-09-11 17:15 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவருடைய மனைவி சாந்தி (வயது 60). இவர் கடந்த ஓராண்டாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சாந்தி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்