மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
கோயைில் 2-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை
கோவை சுண்டப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரூப் குமார். இவருடைய மனைவி ரேணுகா (வயது 42). இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ரேணுகா தனது வீட்டின் 2-வது மாடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.