விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-29 19:57 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆய்க்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவரது மனைவி பொன்முடி(வயது 53). இவர் வலிப்பு நோய்க்கு மாத்திரைகளை சரியாக உட்கொள்ளாமல் இருந்து வந்ததால், அவரை ராஜேந்திரன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்முடி நேற்று முன்தினம் காலை வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில், மயங்கி கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பொன்முடியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மாலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் பொன்முடி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பொன்முடி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்