செஞ்சி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை
செஞ்சி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள தையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சீதாலட்சுமி(வயது 41). குடும்பத்தகராறு காரணமாக சீதாலட்சுமி தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.