குடும்பத்தகராறு பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-02 02:48 GMT

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி வேடபாளையம் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி டிலைலா (33). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

அருளுக்கும் டிலைலாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு 3-வது குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. நேற்று முன்தினம் நீ வேண்டுமானால் உன்னுடைய தாய் வீட்டுக்கு போ என்று மனைவி டிலைலாவிடம் சொல்லிவிட்டு அருள் பள்ளிகூடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அருள் வீட்டுக்கு வந்தார். அவரது மனைவி மற்றொரு அறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 7 மணி அளவில் அறையில் இருந்த மின்விசிறியில் சேலையால் டிலைலா தூக்கு போட்டதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அவரது மகள் தந்தை அருளிடம் வந்து கூறினார். உடனடியாக அறைக்குள் சென்று தூக்கில் தொங்கிய டிலைலாவை கீழே இறக்கி உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து உத்திரமேரூர்போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்