கடன் தொல்லையால் பெண் தற்கொலை

தக்கலை அருகே கடன்தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

Update: 2023-03-09 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே கடன்தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

கடன் தொல்லை

தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம், நீராழிக்கரையை சேர்ந்தவர் வேலப்பன் (வயது60). இவரது மனைவி கலா (57). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். வேலப்பன் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் கலா முறுக்கு சுற்றும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மகளை திருமணம் செய்து கொடுத்தனர். இதற்காக பலரிடம் இருந்து பணம் கடன் வாங்கினர்.

இந்த கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஒரு மகனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பி வைத்தனர். இதற்காகவும் பலரிடம் இருந்து கடன் வாங்கினர். ஆனால் வௌிநாட்டு வேலைக்கு சென்ற மகனுக்கு போதிய சம்பளம் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே கலாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடனை எப்படி அடைப்பது என மனகவலையோடு இருந்துள்ளார்.

இந்தநிலையில் கலா நேற்று முன்தினம் அருகில் உள்ள உறவினரின் வீட்டில் தூங்க சென்றார். அங்கு இரவில் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் உறவினர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்