மணவாளக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-27 19:56 GMT

மணவாளக்குறிச்சி, 

மணவாளக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளை சிவந்தமண் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரபா (வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணமாகி விட்டது.

மற்றொரு மகள் வெளியூரில் படித்து வருகிறார். இவருடைய தாத்தா சந்திரன் (76) பிரபாவின் வீட்டு திண்ணையில் தூங்குவது வழக்கம். பிரபா பலரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், அதனால் கடனை அடைக்க முடியாமல் அவர் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் சத்தம் கேட்டதால் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரன் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பிரபா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்