கும்மிடிப்பூண்டி அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு பெண் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-11 14:43 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பஞ்செட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது 56). இவர் நேற்று முன்தினம் தான் வழக்கமாக உட்கொள்ளும் இதய நோய்க்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதில் கவலைக்கிடமான அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்