சிதம்பரத்தில் தண்டவாளத்தில் படுத்து பெண் தற்கொலை

சிதம்பரத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் படுத்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-13 17:17 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உளள குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ். இவருடைய மனைவி ராதிகா(வயது 32). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் சிதம்பரம் வேளக்குடி ரெயில்வே கேட் அருகே, ராதிகா தண்டவாளத்தில் படுத்துக் கொண்டதாக தெரிகிறது. அப்போது மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரெயில் என்ஜின், ராதிகா மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

அதில் ராதிகா நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் மனம் உடைந்த ராதிகா, நேற்று முன்தினம் வெங்காயத்தலமேடு கிராமத்தில் உள்ள தந்தை மதியழகன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் வேளக்குடி ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ராதிகாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்