தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Update: 2022-06-05 14:58 GMT

வேளாங்கண்ணி:

வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி வடக்கு கிராம பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சலோமினால்மேரி (வயது30). வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் செந்தில்குமார் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் வேளாங்கண்ணியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்தாக தெரிகிறது. இதனால் சலோமினால்மேரி பெங்களூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். சில நாட்களுக்கு முன்பு தனது கணவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்காக தேத்தாகுடி செல்வதாக தந்தையிடம் கூறிவிட்டு வந்தார். ஆனால் அவர் தேத்தாகுடி செல்லாமல் வேளாங்கண்ணியில் உள்ள ஒருவரது வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சலோமினால்மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சலோமினால்மேரியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்