பெரிகுளம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
பெரிகுளம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்
பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முருகன் மனைவி அழகுமுத்து (வயது 43). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
இதையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.