கும்மிடிப்பூண்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை - திருமணமான 3 மாதத்தில் பரிதாபம்

கும்மிடிப்பூண்டி அருகே திருமணமான 3 மாதத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-30 07:24 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ராகவ ரெட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 30). விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலம் சத்யவேடு அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்த சங்கவி (24) என்பவருக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த சங்கவி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்