விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-12 20:12 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 55). தோட்ட வேலை செய்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக கண் பார்வை சரியாக தெரியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த இவர் திடிரென வீட்டில் இருந்த சாணி பவுடரை (விஷம்) கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்