விஷம் குடித்து பெண் தற்கொலை

புதுப்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-08 18:45 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சாந்தி (வயது 50). இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து சாந்தி குடித்துவிட்டார். இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாந்தியை பரிசோதனை செய்த டாக்டா்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் போில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்