பெண் விஷம் குடித்து தற்கொலை

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-20 18:47 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி கோகிலா(வயது 43). சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து கோகிலா வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ேநற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்