விஷம் குடித்து பெண் தற்கொலை

வடலூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-23 19:20 GMT

வடலூர், 

வடலூர் ஆர்.சி. நடேசனார் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகள் ஸ்டெல்லா மேரி (வயது 33). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் கமலநாதன் என்பவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், 2 ஆண் குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்டெல்லா மேரி மனமுடைந்து வீட்டில் யாருமில்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்டெல்லா மேரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்