விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:-
கெலமங்கலத்தை அடுத்த யு.குருபரப்பள்ளியை சேர்ந்தவர் முரளி. இவருடைய மனைவி கீதா (வயது 35). கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த 28-ந் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கீதா வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.