விஷம் குடித்து பெண் தற்கொலை
விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சிறுகனூர் அருகே உள்ள கண்ணாகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 47).இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், முத்துலட்சுமி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முத்துலட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து விட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.இதையறிந்த அவரது குடும்பத்தினர் முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.