விஷம் குடித்து பெண் தற்கொலை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 49). இவருடைய மனைவி இந்திராதேவி (45). இவர்களுக்கு திருமணம் முடிந்து 19 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் ேவதனை அடைந்த இந்திராதேவி அருப்புக்கோட்டை மணி நகரத்திலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் எலி மருந்தை (விஷம்) தின்றதாக கூறப்படுகிறது. உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.