திராவகம் குடித்து பெண் தற்கொலை

திராவகம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-24 18:52 GMT

கரூர் அருகே உள்ள காளியப்பனூரை சேர்ந்தவர் ரூபினா பர்வீன் (வயது 42). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்த ரூபினா பர்வீன் சம்பவத்தன்று வீட்டில் கழிவறையை சுத்தம் செய்யும் திராவகத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்த உறவினர்கள் ரூபினாபர்வீனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரூபினா பர்வீன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்