கோவை ஆர்.எஸ்.புரத்தில் நகை திருடிய பெண் சிக்கினார்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நகை திருடிய பெண் சிக்கினார்

Update: 2022-10-21 18:45 GMT

கோவை

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி ஸ்ரீதேவி (வயது42). இவரது வீட்டில் இருகூரை சேர்ந்த சாந்தி (38) என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலைக்கு வந்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டு பீரோ திறந்து கிடப்பதை ஸ்ரீதேவி பார்த்தார். மேலும் பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க வளையல், ரூ.25 ஆயிரம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். இது குறித்து ஸ்ரீதேவி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நகை மற்றும் பணத்தை சாந்தி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 3½ பவுன் தங்கம், ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்