குளத்தில் இளம் பெண் பிணம்

அய்யம்பேட்டை அருகே திருமணமான ஒரு ஆண்டில் குளத்தில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார்.

Update: 2022-07-02 19:49 GMT

அய்யம்பேட்டை,

அய்யம்பேட்டை அருகே திருமணமான ஒரு ஆண்டில் குளத்தில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் கொடுத்துள்ளார்.

திருமணம்

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள நல்லிச்சேரி கிராமம் மேலத்தெருவை தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் குமரேசன்.கூலி தொழிலாளியான இவருக்கும் திருவையாறை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த குமார் மகள் நவீனா(வயது 26) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திடீர் மாயம்

நேற்று முன்தினம் இரவு குமரேசனும், நவீனாவும் அவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு கண்விழித்து பார்த்த குமரேசன் தனது மனைவி நவீனாவை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக தனது மனைவியை ஊரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

குளத்தில் பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் நேற்று காலை அதே ஊரில் உள்ள குளத்தில் நவீனா தலை குப்புற கவிழ்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். அந்த கிராமத்தினர் அந்த குளத்தின் வழியாக சென்றபோது குளத்தில் நவீனா இறந்த நிலையில் கிடப்பதை பார்த்தனர்.பின்னர் இதுகுறித்து அய்யம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த நவீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவில் மர்மம் என தாய் புகார்

இந்த நிலையில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக நவீனாவின் தாய் சாந்தகுமாரி கொடுத்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதாவும் நவீனாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்