கரடிகள் தாக்கி பெண் படுகாயம்

சிற்றார் வனப்பகுதியில் கரடிகள் தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-06-29 21:47 GMT

அருமனை:

சிற்றார் வனப்பகுதியில் கரடிகள் தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

கரடிகள் தாக்கியது

அருமனை அருகே களியல் வனச்சரகம் உள்ளது. இந்தப் பகுதியில் அரசு ரப்பர் கழகம், மருதம்பாறை டிவிஷன் ரப்பர் தோட்டம் ஆகியவை உள்ளன. இங்கு பால் வெட்டும் தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் அரசு ரப்பர் கழக பால் சேமிப்பு நிலையம் ஆகியவை உள்ளன.

இங்கு பால் வடிப்பு தொழிலாளியாக சசி என்பவரது மனைவி செல்வி (வயது 46) வேலை செய்து வருகிறார். செல்வி வழக்கம் போல் நேற்று ரப்பர் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியிலிருந்து வந்த 2 கரடிகள் செல்வியை தாக்கியது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் செல்வியின் வயிற்றுப்பகுதியில் படு காயம் ஏற்பட்டது. இதனால் செல்வி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து செல்வியை மீட்டு அருகாமையில் உள்ள பத்துகாணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செல்வி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக களியல் வனச்சரக மற்றும் கடையல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வனப்பகுதியில் இருந்து கரடிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் வந்து தொழிலாளர்களை தாக்கி காயப்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவம் தொடராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்