ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவரிடம் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏட்டு சுமதியை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். அதன்படி சுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.