சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை 2-வது தார்வழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி சூரியா (வயது 45) என்பவர் வீட்டில் சாராயம் விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.