போக்சோவில் பெண் கைது

சிறுவனை கடத்திய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-29 19:00 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் செங்கல்சூளையில் பணியாற்றினார். இந்தநிலையில் வேலைக்கு சென்ற சிறுவன் திடீரென மாயமனார். இதுகுறித்து அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அதே செங்கல் சூளையில் பணியாற்றிய 33 வயது பெண்ணும் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய ேபாது பணியாற்றும் இடத்தில் அந்த பெண்ணும், சிறுவனும் பழகி வந்ததாகவும், இருவரும் கன்னியாகுமரியில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கடத்தியதாக அந்த பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்