மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-22 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள அச்சுப்பரளை பகுதியை சேர்ந்தவர் பொவசு. இவருடைய மனைவி லட்சுமி (வயது26). இவர் தனது மகள் மதுவர்ஷிதாவுடன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருபெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் லஞ்சம் கேட்பதாகவும் கூறி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதுதொடர்பாக அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் வழக்குபதிவு செய்து லட்சுமியை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்