கடன் வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த பெண் கைது

கடன் வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-16 19:47 GMT


மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி தமிழரசி (வயது 56). இவர் வீட்டிலேயே ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் தங்கவேலு மகள் சத்யா (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சத்யா, வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தமிழரசி, அவரிடம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 700 கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட சத்யா கடன் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பல முறை தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்காமல் மோசடி செய்து வந்துள்ளார். இதுபோல், சத்யா அந்த பகுதியை சேர்ந்த பலரிடம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 450 வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, தமிழரசி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்