ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண் கைது

ெதன்காசியில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-08 18:45 GMT

தென்காசியில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

நகை திருட்டு

தென்காசி சிவந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி (வயது 69). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரது வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 16 பவுன் தங்க நகை காணாமல் போனது. இதுகுறித்து அவர் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

ஸ்டேட்டசில் நகை

இந்த நிலையில் பங்கஜவல்லி தனது செல்போனில் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் பார்த்து உள்ளார். அப்போது, அவரது வீட்டில் ஏற்கனவே வேலை செய்த ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மனைவி ஈஸ்வரி (40) என்பவரின் ஸ்டேட்டசில் திருட்டு போன தங்கநகை இருப்பதை பார்த்து உள்ளார். ஈஸ்வரி அதனை தனது கழுத்தில் அணிந்து செல்பி எடுத்தும் பதிவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பங்கஜவல்லி இதுகுறித்து தென்காசி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

கைது

இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார், ஈஸ்வரியை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, பங்கஜவல்லி வீட்டில் ேவலை செய்த போது, தங்க சங்கிலியை திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்து திருட்டு போன சுமார் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். உறவினரின் திருமணத்திற்கு சென்ற ஈஸ்வரி திருட்டு போன நகையை கழுத்தில் அணிந்து செல்பி எடுத்து ஸ்டேட்டசில் வைத்து இருந்தபோது சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்