நகைக் கடையில் திருடிய பெண் கைது

சோளிங்கரில் நகைக் கடையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-23 18:12 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந்் தேதி நகை வாங்குவது போல் வந்த மூன்று பெண்கள் போலிநகையை வைத்துவிட்டு 3 பவுன் நகையை எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சோளிங்கர் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 3 பெண்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தக்கான்குளம் அருகே சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், தனிப்பிரிவு ஏட்டு முருகானந்தம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருக்கும்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதம்மாள் (வயது 56) என்பதும், சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள நகைக்கடையில் 3 பவுன் நகை திருடியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த 3 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பெண்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்