நகைக்கடையில் திருடிய பெண் கைது

நகைக்கடையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்

Update: 2023-07-24 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் மெயின்ரோட்டில் ஜெயராமன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு 45 வயது மதிக்கத்தக்க பெண் மோதிரம் வாங்க வந்திருப்பதாக கூறினார். பின்பு கடையில் உள்ளவரின் கவனத்தை திசைதிருப்பி ஒரு பவுன் எடையுள்ள தோடை திருடி சென்றார். பின்பு கடையில் இருப்பு சரிபார்த்த போது தோடு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பார்த்தபோது கடைக்கு வந்த பெண் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஜெயராமன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் நகைைய திருடியது மதுரையை சேர்ந்த மீனாட்சி(வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தோடு மீட்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்