ஓடும்பஸ்சில் பயணியிடம் திருடிய பெண் கைது

ராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-11 18:45 GMT

ராமநாதபுரம் மில்லர் பங்களா வடக்குத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி முத்துமாரி (வயது 37). இவர் ராமநாதபுரம் அரண்மனை மணிக்கூண்டு அருகில் சொந்தமாக பூக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்திற்கு சென்று பூ வாங்கி கொண்டு ரூ.5 ஆயிரத்தினை தனது கட்டை பைக்குள் பர்சில் வைத்து டவுன் பஸ் ஏறி மணிக்கூண்டு பகுதியில் வந்து இறங்கினார். அப்போது அவரின் பின்னால் முண்டியடித்து கொண்டு இறங்கிய பெண் ஒருவர் கண்இமைக்கும் நேரத்தில் பையில் இருந்த மணிபர்சை எடுத்து கொண்டு ஓட முயன்றார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துமாரி கூச்சலிடவும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மடக்கி பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்து விசாரித்தபோது நெல்லை புதுப்பேட்டை ஐ.டி. நகர் பகுதியை சேர்ந்த முருகன் மனைவி பூமாரி (35) என்பது தெரிந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் மணிபர்சுடன் ரூ.5 ஆயிரம் இருந்ததை கைப்பற்றிய போலீசார் பூமாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்