கள் விற்ற பெண் கைது

பிரம்மதேசம் அருகே கள் விற்ற பெண் கைது

Update: 2023-04-18 18:45 GMT

பிரம்மதேசம்

பிரம்மதேசம் அருகே உள்ள ஏந்தூர் கிராமத்தில் பனைமரக் கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரம்மதேசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் ஏந்தூர் கிராமத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதி புதுகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன் மனைவி வசந்தா(வயது 45) விற்பனைக்காக 10 லிட்டர் பனங் கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் பனங் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்