கஞ்சா விற்ற பெண் கைது
திசையன்விளையில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை செல்வ மருதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செல்வ மருதூர் வேன்ஸ்டாண்டு பின்புறம் உள்ள சுகாதார வளாகம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஜோதிக்காவிளை வேதமாணிக்கம் மனைவி செல்வராணி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.