கஞ்சா விற்ற பெண் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-09 18:45 GMT

திண்டுக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரி அருகே நேற்று ஒரு பெண் சந்தேகப்படும் வகையில் நிற்பதை, வடக்கு போலீசார் பார்த்தனர். இதையடுத்து போலீசார், அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வேடப்பட்டியை சேர்ந்த கோகிலாமேரி (வயது 32) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்