கஞ்சா விற்ற பெண் கைது

வந்தவாசி அருகே கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-13 17:07 GMT

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த மழையூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மழையூர் பழைய காலனியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் ஒரு பெண் கஞ்சா விற்று இருப்பதை கண்டு அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரின் மனைவி சிந்து (வயது 21) என்பது தெரியவந்தது.

சிந்துவிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்