திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் தென்மங்கலம் கிராமத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ரகு மனைவி ஜோதி(வயது 44) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.