நிதி நிறுவனம் நடத்தி ரூ.2¼ கோடி மோசடி செய்த பெண் கைது

நிதி நிறுவனம் நடத்தி ரூ.2¼ கோடி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-27 21:00 GMT

தனியார் நிதி நிறுவனம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகள் பவித்ரா (வயது 30). இவர் தான் ஸ்காட்ஸ் என்டர்பிரைசர்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கட்டி ஏமாந்து விட்டதாக பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சென்னை கொரட்டூரை சேர்ந்த சந்தோஷ்குமார், அவரது மனைவி சென்னை மாங்காட்டை சேர்ந்த சிவசங்கரி (35), பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பென்னக்கோணத்தை சேர்ந்த சரத்குமார் ஆகியோர் பவித்ரா மட்டுமின்றி மேலும் சிலரிடம் பணத்தை ஏமாற்றியதும், அவர்கள் இதுவரை மொத்தம் ரூ.2 கோடியே 30 லட்சம் ஏமாற்றியுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

பின்னர் அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில், இன்ஸ்பெக்டர் மீராபாய் மற்றும் அவரது குழுவினர் சென்னை விரைந்தனர். இதில் சிவசங்கரியை போலீசார் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமார், சரத்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்