குடும்ப தகராறில் கணவனின் காலை உடைத்த பெண் கைது

Update: 2022-07-02 17:22 GMT

மத்தூர்

மத்தூர் அருகே உள்ள ஜின்ஜம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது32). தச்சுத்தொழிலாளி. இவரின் மனைவி பிரித்தா (25). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரித்தா கட்டையால் தனது கணவரை தாக்கினார். இதில் ஈஸ்வரனின் கால் உடைந்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரித்தாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்