சிறுமியுடன், பெண் மாயம்
மேல்மலையனூரில் சிறுமியுடன், பெண் மாயம் போலீசார் விசாரணை
மேல்மலையனூர்
மேல்மலையனூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் முனுசாமி மகன் சந்தோஷ்குமார் (வயது 30). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மீனாட்சி(29) என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. தீக்ஷிதா(9) என்ற மகள் இருக்கிறாள். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த ஒருவருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று தாய்வீட்டில் இருந்த மீனாட்சியும், அவரது மகள் தீக்ஷிதா ஆகியோர் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து அவரது கணவர் சந்தோஷ்குமார் வளத்தி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மனைவி, மகளை மதுரையை சேர்ந்த ஹரீஷ் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.