மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்து பலி

ுற்றாலம் அருேக மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.;

Update: 2023-06-18 19:00 GMT

குற்றாலம் அருேக மோட்டார் சைக்கிளில் மகனுடன் சென்ற பெண் தவறி விழுந்து பலியானார்.

துக்க நிகழ்ச்சிக்கு...

நெல்லை மாவட்டம் அம்பை அருகே பள்ளக்கால் புதுக்குடி தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மனைவி சுடலி (வயது 50). இவர் கடந்த 12-ந்தேதி தனது மகன் சிவன் பாண்டியுடன் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் இரவில் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சிவன் பாண்டி ஓட்டிச் சென்றார்.

குறுக்கே பாய்ந்த மான்

குற்றாலம் அருகே பழைய குற்றாலம் செல்லும் மெயின் ரோட்டில் சென்றபோது, ஒரு மான் திடீரென்று சாலையின் குறுக்காக வேகமாக பாய்ந்து ஓடியது. அதன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் சுடலி, சிவன் பாண்டி ஆகிய 2 பேரும் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுடலி சிகிச்சைக்காக ெதன்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுடலி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்