விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் லட்சியத்தை அடையலாம்

விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் லட்சியத்தை அடையலாம்

Update: 2022-10-19 19:29 GMT

விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் லட்சியத்தை அடையலாம் என்று தஞ்சையில் நடந்த போலீஸ் பயிற்சி நிறைவு விழாவில் போலீஸ் ஐ.ஜி. மல்லிகா கூறினார்.

போலீஸ் பயிற்சி

தஞ்சையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2-ம் நிலை போலீசாருக்கான பயிற்சி கடந்த 7 மாதங்களாக நடைபெற்றன. இதில் 225 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கவாத்து, யோகா, சிலம்பம், துப்பாக்கி சுடுதல், சட்டம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பயிற்சி பள்ளி முதல்வரும், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான ரவளிபிரியா தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை போலீஸ் பணியமைப்பு ஐ.ஜி. மல்லிகா கலந்து கொண்டு பேசினார்.

பரிசு, சான்றிதழ்கள்

பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் சிறந்த விளங்கிய பயிற்சி காவலர்களுக்கும், பயிற்சி அளித்த போலீஸ்காரர்களுக்கும் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பயிற்சி போலீசாரின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

பின்னர் ஐ.ஜி.மல்லிகா பேசியதாவது:-

நீங்கள் எந்த பணி செய்தாலும் அதனை ஊக்கத்துடன் செய்ய வேண்டும். இன்னும் 40 ஆண்டுகாலம் உங்களுக்கு பணிக்காலம் உள்ளது. இதில் நீங்கள் புகழ் பெற்று வெற்றியை தேடித்தர வேண்டும். எந்த பணியாக இருந்தாலும் அதில் குறிக்கோளோடு செயல்பட வேண்டும்.

கடின உழைப்பு

நீங்கள் லட்சியத்தை வகுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். அதனை அடைய ஒவ்வொரு நாளும் முயற்சி மேற்கொள்ளவேண்டும். கடவுள் மீது நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். லட்சியத்தை அடைய கடின உழைப்பு, விடா முயற்சி அவசியம். அதோடு மனசாட்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் சிறந்த சேவை செய்து நாட்டுக்கு பெருமையை தேடி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் போலீஸ் பயிற்சி மைய துணை முதல்வர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்