மின் இணைப்பு எண்ணுடன்ஆதார் இணைப்பில் தேனி முதலிடம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் தேனி மின்பகிர்மான வட்டம் 100 சதவீதம் இணைத்து தமிழகத்தில் முதலிடம் பிடித்தது.

Update: 2023-01-24 18:45 GMT

ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஆதார் எண் இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

தேனி மாவட்டத்தில் வீடுகள், குடிசைகள், விசைத்தறி, விவசாயம் போன்ற பயன்பாட்டுக்காக 4 லட்சத்து 45 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வணிக பயன்பாட்டுக்காக சுமார் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வீடுகள், குடிசைகள், விசைத்தறி, விவசாய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து முழு வீச்சில் பணிகள் நடந்து வந்தன. ஆதார் எண் இணைப்புக்கு வருகிற 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முதலிடம்

இருப்பினும் தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் ஆதார் எண் இணைப்பு பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து, 100 சதவீதம் ஆதார் எண் இணைத்ததில், தேனி மின் பகிர்மான வட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விடுபட்ட இணைப்புகளுக்கு வீடு வீடாக சென்று ஆதார் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் 100 சதவீதம் இணைக்கப்பட்டு தமிழகத்தில் தேனி மின்பகிர்மான வட்டம் முதலிடம் பிடித்தது. இதற்காக மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பாராட்டு தெரிவித்தார்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்